Sunday, March 2, 2008

Happy Birthday அம்மா!!!




My Heart felt Birthday Wishes for you amma...




"The Words in my Mind is not enough to Express the feel in my HEART...

Many More Happy Returns of the Day amma...."

This Post is dedicated to my beloved amma...

நெஞ்சினிலே... நெஞ்சினிலே...

வருடத்தில் இரண்டாம் மாதம்...

மாதத்தில் எட்டாம் நாள்...

புவியில் ஜெனனம் எடுத்து...

அன்பு பெற்றோர்க்கு ஆசை மகளாய்,தங்கையாய் பிறந்து...

அழகாய் வளர்ந்து நின்றேன்...

இப்பொழுது திரும்பி பார்க்கிறேன்...

மீண்டும் அவை மீண்டு வருமா என்று?

அந்தநாளில்,

அழகாய் அலங்கரித்து பள்ளிக்கு அனுப்பும் அம்மா.

ஆசையுடன் பள்ளியில் இருந்து அழைத்து வரும் அப்பா.

அன்பு சண்டைபோட்ட அக்கா.

சோறு ஊட்டி, தாலாட்டி

விரும்பியதை வாங்கி கொண்டு

செல்ல மகளாய் வளர்ந்தேன்

தன் வேலையை ஒழுங்குடன் செய்தது காலம்

மாற்றங்கள் பல....

ஞானிகள் கூற்று போல...

"மாற்றங்கள் மட்டுமே நிலையானது"

அதுபோல,

சில மாற்றங்களை மனம் விரும்பியது

பல மாற்றங்களை மனம் வெறுத்து

உடல் ரீதியான மாற்றத்திற்கு பெரியவள் ஆனேன் என்றனர்

மன ரீதியான மாற்றத்திற்கு பக்குவப்படேன் என்றனர்

சற்று நின்று என்னை பார்த்தேன்!!!

விடலை பருவத்தில் நான்...

காதலர்களுகாகவே அர்ப்பணித்து விட்ட மாதத்தில் பிறந்த எனக்கு காதல்

வரவில்லை என்றால் எப்படி?

அத்தை மகன் என்னிடம்...

நீ என்னை காதலிகின்றயா?




என்ற பொழுது

என் முடிவை உடனே கூற இயலாமல்,

காதலர் தினத்திற்கு மறுநாள்

ஆமாம்! உங்களை நான் காதலிகின்றேன்

என்று கூருவதர்க்குள் என் மனம் பட்ட பாடு...

"கலங்கியது கண்கள்...

பதறியது மனம்...

நடுக்கத்தில் உடல்...

அச்சத்தில் வார்த்தைகள்...

ஒரு வழியாக காதலை சொல்லி காதலர்களாக மாறினோம்

நாட்கள் உருண்டோடினன...

இனிமையான காதல் பருவம் முழுமை அடையும் தருவாயில்...

என் காதலுக்கு வந்தது ஆபத்து

பெண் பார்க்கும் படலம் என்னும் ரூபத்தில்...

அம்மா ஒருபுறம் அறிவுரை கூற...

அப்பா மறுபுறம்...

வயதாகிவிட்டதம்மா....

உன்னை ஒருவனிடம் கரம் பிடித்து கொடுத்துவிட்டால் எங்கள் கடன்

தீரும்மம்மா...

என்றனர் பெற்றோர்

மறைத்து வைத்த காதலை சொல்ல நேரம் வந்தது...

"கத்திரிக்காய்" உவமை போல ஆனது எங்கள் காதல்...

பெற்றோர்களுக்கு தெரிந்தது

ஆதரவுடன் பெற்றோர்கள் அமைதியாய் கலந்தாலோசித்து

"சித்திரை நன்னாளில் நிச்சயம் செய்து...

பண்புடன் பத்திரிகையிட்டு...

வைகாசி திருநாளில் மனம் முடித்து வைத்தனர்"


காதலர்களாய் இருந்த எங்களை தம்பதிகளாக மாற்றிய பெற்றோர்களுக்கு

மனமகழ்சியுடன் "நன்றிகடன்" பட்டோம்.

இல்லறத்தை நல்லறமாக மாற்றும் பணிக்கு சென்று நல்ல மருமக்களாக

மாறினோம்!...